இயக்குனர் ஷங்கர் பெயரில் ‘குக் வித் கோமாளி’ புகழை ஏமாற்றிய நபர்

Cooku with Comali : விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி.

இவ்நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவர் தற்போது சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் என திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் இவர் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த செவ்வி ஒன்றில், இயக்குனர் ஷங்கர் பெயரில் தன்னை ஒருவர் ஏமாற்றியது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ‘ஒருநாள் இயக்குனர் ஷங்கரின் அலுவலகத்திலிருந்து பேசுவதாக எனக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு என்னை வரச் சொன்னார். நான் அங்கே சென்று அவரை அழைத்த போது அந்த போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றமடைந்தேன்.நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

cook with comali puzhal