இனி வயதிற்கு ஏற்ப கதாபாத்திரங்களில் நடிப்பேன் – ரஜினி

Rajanikanth : தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பியுள்ளார். மேலும் அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என தெரிய வருகிறது.

இதனிடையே சமீபத்தில் ரஜினி அவரின் நண்பர்களுடன் கலந்துரையாடியபோது ” அண்ணாத்த திரைப்படம் நிச்சயம் எனது கடைசி சினிமாவாக இருந்து விட கூடாது. நான் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்.மேலும் எனது வயதிற்கு ஏற்ப கதாபாத்திரங்களில் நிச்சயமாக நான் நடிப்பேன்” என கண்கலங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

Rajanikanth

latest rajinikanth news updates