இந்தவார இறுதியில் கர்ணன் பட டீசர்

Dhanush – Karnan : இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார்.

மேலும் கர்ணன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கிடைத்த தகவல்களின் படி இந்தவார இறுதியில் கர்ணன் பட டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Karnan

Karnan Image Teaser This Weekend