புதிய காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை சனம் ஷெட்டி

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்கள் மனதில் தடம் பதித்த போட்டியாளர்களின் ஒருவர் சனம் ஷெட்டி.

திரைத்துறையில் தொடர்ந்து இருந்துவரும் சனம் ஷெட்டிக்கு, பிக் பாஸ் அதிக ரசிகர்களை உருவாக்கி, ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.

இந்நிலயில் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்சனை, சனம் செட்டி காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகி பிரிந்துள்ளமை தெரிந்ததுவே.

இந்நிலையில் இந்த காதலர் தினத்தை அவரது புதிய காதலருடன் கொண்டாடியுள்ளார் சனம் ஷெட்டி. அவருடன் எடுத்த புகைப்படத்தையும் சனம் ஷெட்டி ஷேர் செய்துள்ள போதும், புதிய காதலரின் முகம் அதில் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.