மீண்டும் ‘மருது’ கூட்டணி இணையும் புதிய திரைப்படம்

குட்டிப் புலி, கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இந்நிலையில் சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பி.யில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்தது.

இந்நிலையில், முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்தில் மீண்டும் நடிகர் விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Again Vishal joins with director Muthaiah