14 வருடம் கழித்து கிடைத்த வெற்றி – தளபதி பாடலுக்கு நடனம் ஆடி கொண்டாட்டம்

கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக “செய்யது முஸ்டாக் அலி” கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் கர்நாடக அணி வீரர்களுடன் தோல்வியை சந்தித்த தமிழக அணி தற்போது கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இம்முறை அரை இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதியாக பரோடா அணியையும் வீழ்த்தி கோப்பையைச் சொந்தமாக்கி இருக்கிறது அணி. சிறந்த வீரராக தமிழக அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றிய தமிழக அணி வீரர்கள் தளபதி விஜயின் “வாத்தி கமிங்” பாடலுக்கு நடனம் ஆடி கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.