கமல் கட்சிக்கு திமுக கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகள் – ரசிகர்கள் அதிர்ச்சி

அதிமுக, திமுக கட்சிக்கு மாற்றாக கமல் கட்சி இருக்கும் என ரசிகர்கள் கருதிவந்த நிலையில், கமல் கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 ஆசனங்கள் மட்டுமே கிடைக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளதால் கமலின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன. இந்த நிலையில் முதல்முறையாக சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள, திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 இடங்களை ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Blocks available to Kamal party in DMK alliance - Fans shocked

அதிமுக, திமுக கட்சிக்கு மாற்றாக கமல் கட்சி இருக்கும் என நடுநிலையாளர்கள் கருதிய நிலையில் அக்கட்சியும் வழக்கம்போல் ஒரு திராவிட கட்சியில் கூட்டணியில் இணைந்ததும் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கட்சி தொடங்கி ஒரு சில ஆண்டுகளே ஆகிய கட்சிக்கு 25 இடங்களை திமுக அள்ளிக் கொடுத்துள்ளதால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.