வில்லனாக நடிக்க தயாராகும் விஷால்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷாலும் வில்லனாக நடிக்க தயாராகி வருகிறார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்த இரும்புத்திரை படம் வெற்றிகரமாக ஓடியது. இதில் கதாநாயகியாக சமந்தாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து இருந்தனர். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். விஷால் கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அர்ஜுனின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஷாலை அணுகி உள்ளனர் படக்குழுவினர். முதலில் இரும்புத்திரை திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கத்தான் விஷால் விருப்பம் தெரிவித்தார். பின்னர் அர்ஜுனை வில்லன் ஆனார். தகவல்களை திருடும் சைபர் குற்றங்களை மையப்படுத்தி இரும்புத்திரை படம் தயாராகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal ready to play villain!

Vishal ready to play villain!