‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் உலக அழகியின் செல்பி! வைரலாகும் புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராய் பச்சன் செல்பி புகைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று கதையை கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பல பிரபல நடிகர் நடிகையர்கள் நடித்துவருவது அறிந்ததே. அந்த வகையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயுடன் நடிகை அருஷிமா வர்ஷினி எடுத்துக் கொண்ட செல்பி ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.

பொன்னியின் செல்வன் படமானது கல்கி எழுதிய வரலாற்று கதையை கொண்ட ஓர் நாவலின் தழுவலாக உருவாகி வருகிறது. தமிழர்களின் நெஞ்சைத்தொட்ட மிகவும் கவர்ந்த இந்த நாவலில் சோழ வம்சத்தை பற்றியும் அதன் பராக்கிரமங்களையும் காட்சி படுத்தி இருக்கிறார். அத்தகைய கதையை இயக்குனர் மணிரத்னம் பிரமாண்டமான படமாக கொடுக்க இருப்பதால் ரசிர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லஷ்மி போன்றோர் நடித்து வருவதாக ஏற்கனவே படக்குழு அறிவித்து இருந்தது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகை அருஷிமா வர்ஷ்னியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் படப்பிடிப்புக்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி இருக்கிறது.

https://www.instagram.com/p/CKgFmVxjmpt/?utm_source=ig_web_copy_link