‘சூர்யா 40’ படத்தில் சிவகார்த்திகேயன் பட நாயகி இணைந்ததன் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூர்யாவுடன் இணையும் ‘டாக்டர்’ பட நாயகி

‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படமான ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தேர்வு நடைபெற்று வருவதுடன் ‘சூர்யா 40’ படமான இப்படத்தில் நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.