ரஜினியை முந்தும் விஜய், ரசிகர்கள் மகிழ்ச்சி

‘அண்ணாத்த’ படத்துக்கு போட்டியாக முன்னிற்கும் தளபதி 65 படம்!

விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார் என்பதும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தயாரிக்க இருப்பதும் அறிந்ததே. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கு முன்பாகவே தளபதி 65 படம் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘அண்ணாத்த’ திரைப்படமானது சிறுத்தை சிவாவின் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வருகிறது என்பதும் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அதிகார பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. விஜய் நடிக்கும் தளபதி 65 படம் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் ‘அண்ணாத்த’ மற்றும் ‘தளபதி 65’ ஆகிய இரு படங்களுமே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் என்பதால் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகாது என்பது உறுதி.

Vijay ahead of Rajini, fans happy

அதனால் தளபதி 65 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளிவரும் என கூறப்படட நிலையில் தற்போது மீண்டும் தளபதி 65 ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் ஆயுத பூஜை தினத்தின்று தளபதி 65 வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

Vijay ahead of Rajini, fans happy

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விஜய் நேரடியாக தளபதி 65 திரைப்படம் இந்த ஆண்டே வெளிவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இதனையடுத்து படக்குழுவினர் தற்போது ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

Thalapathy 65 film ready to fight with 'Annatha'

மேலும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thalapathy 65 film ready to fight with ‘Annatha’