ஸ்ருதிஹாஸன் பிறந்தநாள் ட்ரீட் – மாஸ் நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாஸன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிறந்தநாள் ட்ரீட் ஆக மாஸ் நடிகர் ஒருவரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

salaar

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ்நடிக்கும் அடுத்த பிரமாண்ட படத்திற்கு ’சலார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் எனப்வர் இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருப்பதை பிரபாஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிக்கவிருப்பதை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sruthihaasan Birthday Treat – Sruthihaasan is paired with a mass actor