சிம்புவுக்கு வில்லனாகும் முன்னணி இயக்குனர்

கன்னடத்தில் நாரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’ திரைப்படம், தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ளார். மேலும் நடிகை பிரியா பவானி சங்கர், அசுரன் நடிகர் டீஜே, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் கவுதம் மேனன், வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.

paththu thala

Leading director who is the villain for Simbu